கண் சிகிச்சை முகாம்

அவளூரில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-18 18:35 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த அவளூர் கிராமத்தில் நேற்று ஸ்ரீஓம் ஆதிசக்தியேந்திர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தினர். முகாமை ஸ்ரீஓம் ஞானசக்தியேந்திர சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண் புரை அகற்றுதல் உள்ளிட்டவைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 160 பேர் கலந்துகொண்டனர். இதில் 20 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்