கட்டிட மேஸ்திரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் பறிப்பு

வேலூர் அருகே கட்டிட மேஸ்திரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-09 17:41 GMT

வேலூரை அடுத்த நரசிங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50), கட்டிட மேஸ்திரி.

இவர் நேற்று மேல்மொணவூர் பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தேவேந்திரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிந்து விசாரித்தார்.

அதில் பணத்தை பறித்து சென்றது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23), முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்த சரண்ராஜ் (23) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

ரகுவரன் மீது வேலூர் வடக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகளும், சரண்ராஜ் மீது வேலூர் வடக்கு, விருதம்பட்டு, விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகளும் ஏற்கனவே உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்