ஒப்பந்ததாரரிடம் ரூ.1½ லட்சம் வழிப்பறி?-போலீசார் விசாரணை
ஒப்பந்ததாரரிடம் ரூ.1½ லட்சம் வழிப்பறி நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் பணியில் இருந்த போலீசாரிடம் அவர், '5 ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் என்னை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அந்த பகுதியில் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, 'மர்ம நபர்கள் சிலர் பணம் வழிப்பறி செய்ததாக கூறியவர் குடிபோதையில் இருந்தார். இதனால் அவரை காலையில் வந்து புகார் கொடுக்குமாறு பேசி அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் மீண்டும் புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரிடம் பணம், நகை வழிப்பறி செய்யப்பட்டது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்கள்.