மாடு வாங்க வைத்திருந்த பணம் பறிப்பு
மாடு வாங்க வைத்திருந்த பணத்தை பறித்து சென்றனர்.
காரியாபட்டி,
பரமக்குடி தாலுகா பீர்க்கன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 32) என்பவர் நரிக்குடி, வீரசோழன் அருகே ஒட்டங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிலர், அவரை தாக்கியதாகவும், மாடு வாங்க வைத்திருந்த ரூ.1 லட்சத்தையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.