விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
வேலூரில் விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜாரை சேர்ந்தவர் பவர்லால் (வயது 47). இவர் அதே பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் விஷ்ணு (23) அந்த விடுதிக்கு சென்று மாதந்தோறும் எனக்கு மாமூல் தர வேண்டும் என்று கத்தியை காட்டி பவர்லாலை மிரட்டி உள்ளார். மேலும் அவரிடமிருந்து ரூ.1,000-யை பறித்து சென்றார்.
இதுகுறித்து பவர்லால் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிந்து விஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.