பிரியாணி கடைக்காரரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது

பிரியாணி கடைக்காரரிடம் பணம் பறித்தை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-14 18:45 GMT

செஞ்சி,

செஞ்சியை அடுத்த மீனம்பூர் பகுதியை சேர்ந்தவர் முக்தார் மகன் இர்பான் (வயது 37). இவர் செஞ்சியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று காலை செஞ்சி கூட்டுரோடு அருகே நின்று கொண்டிருந்தபோது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரிய கோலப்பாடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சீனிவாசன் (28) என்பவர் இர்பான் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.220-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

அவரை அருகில் இருந்தவர்கள் விரட்டி பிடித்து செஞ்சி போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர். இதையடுத்து சீனிவாசன் மீது போலீசாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்