தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் ஈரோடு-சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் சோப்பு ஆயில் தயார் செய்யும் கம்பெனியில் பொருட்களை டெலிவரி செய்யும் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சோப்பு ஆயிலை வாகனத்தில் கொண்டு கடைகளில் டெலிவரி கொடுத்து விட்டு, புன்னம் சத்திரம் நோக்கி வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு முருகன் இறங்கி உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.