தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

புதுக்கடை அருகே தொழிலாளிைய தாக்கிய பணம் பறிக்கப்பட்டது.

Update: 2023-02-05 18:45 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே தொழிலாளிைய தாக்கிய பணம் பறிக்கப்பட்டது.

புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற மாணிக்கம் (வயது 41), தொழிலாளி. இவருக்கும் கீழ்குளம் பகுதியை சேர்ந்த சிவா (37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குமார் வேலைக்கு செல்வதற்காக பைங்குளம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவா, குமாரை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். கொடுக்க மறுத்ததால் குமாரை தாக்கி, அவரது சட்டை பையில் இருந்த 100 ரூபாயை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்