தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

களக்காடு அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-23 19:39 GMT

களக்காடு:

களக்காடு அருகே கீழகள்ளிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவருக்கும், கீழதுவரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மதியழகனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக களக்காடு போலீசில் பரமசிவன் அளித்த புகாரின் பேரில், மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மதியழகன், பரமசிவனை மீண்டும் தாக்கினார். அதன் பின் களக்காடு-சேரன்மாதேவி சாலையில் நின்று கொண்டிருந்த பரமசிவனின் மகன் தொழிலாளியான பழனியிடம் (47), மதியழகன் மது அருந்த பணம் தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு பழனி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மதியழகன், கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்தார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி பழனி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்