வியாபாரியிடம் செல்போன், பணம் பறிப்பு
வியாபாரியிடம் செல்போன், பணம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 50). வியாபாரியான இவரை நேற்று நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது 3 மர்மநபர்கள் வழிமறித்து மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மேலத்தோழித்துறை சேர்ந்த ஆனந்த் (20), முருகன் (19) கொங்கந்தான்பாறையை சேர்ந்த சுந்தர் (35) ஆகிய 3 பேரை கைது செய்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.