மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-27 16:35 GMT

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் சைன மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.sholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ- மாணவிகள் பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்