கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கால அவகாசம் நீட்டிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-05 17:54 GMT

ராணிப்பேட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் 1.1.2011-ந் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாத கால அவகாசம் நீடிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது.

எனவே விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்