அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தொிவித்துள்ளாா்.

Update: 2023-06-15 18:45 GMT

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டு அரசால் 24.6.2022 முதல் 31.12.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பித்து இசைவு பெற உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குனர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், எண் 56/ஏ, தாட்கோ வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்-605 602 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04146-220045 தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்ய இதுவே கடைசி அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்