குமரியில் மழை நீடிப்பு
குமரியில் மழை நீடிப்பு அதிகபட்சமாக சிற்றார்-2 அணை பகுதியில் 28.2 மி.மீ. பதிவு
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. முக்கியமாக மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 28.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
இதேபோல பேச்சிப்பாறை-17.2, பெருஞ்சாணி-5.4, சிற்றார் 1-21.4, பூதப்பாண்டி-1.6, களியல்- 5.2, நாகர்கோவில்-5.4, சுருளகோடு-1.4, தக்கலை-11.1, குளச்சல்-8.6, இரணியல்-12, மாம்பழத்துறையாறு-19.6, கோழிப்போர்விளை-8, குருந்தன்கோடு-12.8, முள்ளங்கினாவிளை-12.6, ஆனைகிடங்கு-18.2, அடையாமடை-8, முக்கடல்-9.2, குளச்சல்-8.6, குழித்துறை-4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 477 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் நீர்மட்டம் 44.32 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 28 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 2 கனஅடியும் தண்ணீர் வந்தது.