அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 கட்ட கலந்தாய்வு முடிந்து, தற்போது 16-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் டர்னர், மெஷினிஸ்ட், பேஸிக் டிசைனர் அன்டு விர்சுவல் வெரிபையர் (மெக்கானிக்கல்) போன்ற 2 வருட தொழிற்பிரிவுகளுக்கும், கோபா, மேனுபேக்சரிங் புராசஸ் கண்ட்ரோல் அன்டு ஆட்டோமேஷன், இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் ஒருசில இடங்களே காலியாக உள்ளது.
ஆதலால் மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவர்கள் காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேரலாம். அங்கு சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபட கருவிகள், நோட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்படும்.
ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750 உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.