வைகுண்ட ஏகாதசியையொட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

Update: 2023-12-22 00:21 GMT

சென்னை,

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12633) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12634) இன்று மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16101) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16102) இன்று மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்