கூடைப்பந்து போட்டியில் சுரண்டை பள்ளி மாணவிகள் சாதனை

குற்றாலத்தில் நடந்த கூடைப்பந்து போட்டியில் சுரண்டை பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2023-02-14 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்ட அளவில் முதல்-அமைச்சா் கோப்பை கூடைப்பந்து போட்டி குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடந்தது. பெண்களுக்கான இந்த போட்டியில் சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிச்சேரி, செங்கோட்டை எஸ்.ஆா்.எம். பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட சுமாா் 10 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல் பாிசை பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி, விளையாட்டு ஆசிரியா்கள் கோபால், மஞ்சுளா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்