நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்

நாமக்கல்லில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதற்கு ஓபிஎஸ் ஆதர்வாளர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.

Update: 2022-10-04 11:00 GMT

சென்னை

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள = ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளரான ஜே சி டி பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு ரத்து செய்யகோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கின் தகவல்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக 3 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உடன் அதனைக் கண்டு அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த தங்கமணி ஒருவித பயத்துடனும் கவலையுடனும் பேசிவருகிறார்.

ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடர்ச்சியாக தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். பொய்யை சொல்ல இதுவரை ஜெயக்குமார் மட்டுமே இருந்தார், தற்போது தங்கமணியும் இணைந்துள்ளார்.

தர்மயுத்தத்தின் போது தனக்கு பதவி கிடைக்க விட்டாலும் கட்சி உடைந்து போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஓபிஎஸ் அதிமுகவை ஒன்றிணைய சம்மதித்தார்.

இரு அணிகளும் இணையும் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அளித்த ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தான் என தங்கமணி, வேலுமணி கூறினர்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை டெல்லி செல்லும் போது ஓ. பன்னீர்செல்வத்தை மட்டும் தான் அழைத்துச் சென்றார். ஆனால் ஒரு முறை கூட எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துச் சென்றதில்லை.

Full View

பிரதமர் மோடி ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அழைத்தபோது இபிஎஸ் ஓபிஎஸ் உடன் செல்ல மறுத்து விட்டார். தனியாக சென்றார். எனினும் ஓபிஎஸ் தொடர்ந்து அமைதி காத்து கட்சிக்காக தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தார்.

கடந்த ஜூன் மூன்றாம் தேதி அ.தி.மு.க. பொது குழுவில் ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதற்கு முந்தைய டிசம்பர் மாதம் தானே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவி தேர்வு செய்யப்பட்டது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்பபட்டது.

கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்தியலிங்கம் நத்தம் விஸ்வநாதன் அடிக்க பாயவில்லை தங்கமணி தவறான தகவலை ஊடகங்களில் வெளியிடுகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான்.ஒவ்வொரு முறை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை அடிப்படையில் அந்த குழுக்கள் செயல்படும். ஆனால் அந்த நடைமுறைகளை முழுவதுமாக மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி தான்

இதன் காரணமாக தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தோம். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்தனர், இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார்.

விரைவில் சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான இடத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பார் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்