கோவில்கள் புனரமைப்பு குறித்த வல்லுனர்கள் குழு கூட்டம்
வேலூரில் கோவில்கள் புனரமைப்பு குறித்த வல்லுனர்கள் குழு கூட்டம் நடந்தது.
வேலூர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் அலுவலகத்தில் வல்லுனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வேலூர் மண்டலத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்தல், மீண்டும் குடமுழுக்கு செய்தல், சீரமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு இணைஆணையர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
இதில் கோவில் நிர்வாகிகள், வல்லுனர் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு கோவில் வாரியாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.