வாழைத்தோட்டம் அரசு பள்ளியில்பழங்கால நாணயங்கள் கண்காட்சி

Update: 2023-07-23 19:30 GMT

தர்மபுரி:

பாலக்கோடு ஒன்றியம் வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொல்லியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மன்றத்தை தொடங்கி வைத்தார். சமூகவியல் ஆசிரியை மஞ்சுளா தொல்லியல் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி பேசினார். விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உமாசங்கரி, செந்தில், நீலாம்பிகை மற்றும் பலர் பேசினார்கள். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்