தி.மு.க. செயற்குழு கூட்டம்

தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2023-05-03 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சியினர் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கைமாறன் பேசினார்.

கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், சுப்பையா, அக்கினிராஜ், வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் சக்திமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, மீனாட்சி மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்