செயற்குழு கூட்டம்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முன்னதாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரையில் நடைபெற உள்ள பயிற்சி பட்டறை நிகழ்வில் வட்டார அளவில் கலந்துகொள்ளுதல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சாலை ஆய்வாளர் பாண்டிசெல்வம் நன்றி கூறினார்.