கண்ணை கட்டிக்கொண்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு

கடையம் யூனியன் கூட்டத்திற்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-19 13:32 GMT

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ேநற்று நடைபெற்றது. அப்போது, தெற்கு கடையம் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மாரிகுமார் என்பவர் ராஜீவ்காந்தி படத்துடன் கண்ணை வெள்ளை துணியால் கட்டியபடி பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோஷமிட்டபடி நுழைந்த அவர் கவுன்சிலர்களின் இருக்கையில் ராஜீவ்காந்தியின் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது துணை தலைவர் மகேஷ் மாயவன், தலைவர்கள் படத்தை மன்ற கூட்டத்தில் வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ராஜீவ்காந்தி படத்தை வைப்பேன் என்று மாரிகுமார் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயக்குமார், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், தலைவர்களையும் மதிக்கிறோம். மன்ற கூட்டத்தில் தலைவர்கள் படத்தை வைக்க கூடாது என்று கூறினார். பின்பு கவுன்சிலர் மாரிகுமார் படத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.




Tags:    

மேலும் செய்திகள்