சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய கரடியால் பரபரப்பு

மசினகுடி-மாயார் சாலையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய கரடியால் பரபரப்பு காணப்பட்டது.

Update: 2022-06-14 13:51 GMT

கூடலூர், 

கூடலூர்-முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடி, செந்நாய், சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை காண முதுமலை, மசினகுடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வந்த ஒரு கரடி திடீரென சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மறித்தது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் சென்ற கரடி, ஒரு மரத்தை பிடித்தபடி நின்றிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் கரடி வனப்பகுதிக்குள் சென்றது. முன்னதாக கரடி அச்சுறுத்தியதால் பரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சிலர் அச்சத்துடன் கரடியின் குறும்புத்தனத்தை தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மானை புதருக்குள் பதுங்கியிருந்த புலி பிடிக்க பாய்ந்த வீடியோ காட்சியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த 2 காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்