கள்ளக்குறிச்சி பகுதியில் தாழ்வாக பறந்த விமானங்களால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி பகுதியில் தாழ்வாக பறந்த விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிய அளவிலான விமானங்கள் அவ்வப்போது தாழ்வாக பறந்து சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி மற்றும் 11.30 மணியளவில் சிறிய அளவிலான 5 விமானங்கள் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தாழ்வாக பறந்து சென்றன. அப்போது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நின்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாழ்வாக சென்ற விமானங்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டையிலும் விமானங்கள் தாழ்வாக சென்றன. கள்ளக்குறிச்சி பகுதியில் அடிக்கடி சிறிய ரக விமானங்கள் தாழ்வாக சென்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.