காட்டுப்பகுதியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் மகன் செந்தில்முருகன் (வயது 19). இவர் தென்காசி சாலையில் பூக்கடை ஒன்றில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில் முருகன் வீட்டில் இருந்து மண்எண்ணெய்யை எடுத்து கொண்டு மாயமான்குறிச்சி ஊருக்கு வெளிப்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று தீக்குளித்தார். இதனால் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வலி தாங்க முடியாமல் துடித்து கொண்டிருந்த செந்தில்முருகன் செல்போன் மூலம் தனது உறவினருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் ்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது. தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.