பழஜூஸ்சில் பல்லி கிடந்ததால் பரபரப்பு

திருச்சியில் பழஜூஸ்சில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-06-28 19:41 GMT


திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் ஒரு பழஜூஸ் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் உறையூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவர் பழஜூஸ் வாங்கி குடித்தார். அப்போது, பழஜூஸ்சில் பல்லி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீஸ் நிலையத்துக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பழக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு அழுகிய பழங்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பழங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். அத்துடன், கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அறிவுறுத்திய அவர்கள், தரமான பழங்களை பழஜூஸ் தயார் செய்ய பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கி எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்