அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

Update: 2022-06-19 14:19 GMT

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது 44). டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி ஷிபாநத்(41). இவர்களது மகன் ஹரிஷ்(14). இந்த நிலையில் பாபு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்துக்கொண்ட அவரது மனைவி ஷிபாநத், பாபுவை பிரிந்து வால்பாறை சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டார். மேலும் பாபுவுக்கு காலில் வெரிக்கோஸ் வெயின் பாதிப்பு இருந்தது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதற்கிடையில் சிக்கலாம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெளியே அளவுக்கு அதிகமாக மது குடித்து பாபு விழுந்து கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துகடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்