கடலூரில் நடந்த உடற்தகுதி தேர்வு நிறைவு:இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் 646 பேர் தேர்ச்சி

கடலூரில் நடந்த உடற்தகுதி தேர்வில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் 646 பேர் தேர்ச்சி பெற்றனா்.

Update: 2023-02-09 18:45 GMT


தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் தேர்வு பணிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, தற்போது உடற்தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு நடந்து வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 876 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்கட்டமாக நடந்த உடற்தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில் அதில் 652 பேர் இரண்டாம் கட்ட உடற் தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் 652 பேருக்கும் 2-ம் கட்டமாக உடற்திறன் தேர்வு நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இதற்கு 6 பேர் வரவில்லை. இதையடுத்து 2 நாட்கள் நடந்த உடற்தகுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதன் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்