மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது.

Update: 2023-09-06 18:13 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுகளுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, அனைத்து வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு செய்யும் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி 8-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 12-ந் தேதி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 15-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ந் தேதி அரக்கோணம் ஜோதி நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ந் தேதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26-ந் தேதி காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், 27-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறும்.

அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவைப்படும் எனில் தங்களது அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் பாஸ்போர்ட் அளவு 5 போட்டோ ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்