ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த மாதம் 17,18-ம் தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த டி.ஆர்.பி தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஜனவரி 6,7 அன்று நடத்த உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.