முன்னாள் ராணுவ வீரருக்கு கத்திவெட்டு

கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-18 13:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அருந்ததிபாளையம் பகுதியை சே்ாந்தவர் மாரிமுத்து (வயது 46), ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மாரிமுத்துவை 3 பேர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்