மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் சிறையில் அடைப்பு
மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கந்தர்வகோட்டை அருேக உள்ள வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முன்னாள் ராணுவ வீரர். இவா் தனது மாமனார் சைவராஜை இரட்டை குழல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிந்து ரவிச்சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கந்தர்வகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.