முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் முகாம்

வாய்மேடு அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது

Update: 2022-09-04 18:11 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் ஆயிஷா பேகம் தலைமை தாங்கினார். அகில இந்திய முன்னாள் படைவீரர்கள் நல சங்க வட்டாரத் தலைவர் கேப்டன் தமிழரசன் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்