மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ் ணமூர்த்தி (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு விக்ராந்த் என்ற ஒரு மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது பழைய நீதிமன்றம் அருகே அந்த வழியாக கச்சைகட்டியை சேர்ந்த காளி (வயது 30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக 'வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்ய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காளியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.