முன்னாள் ராணுவ வீரர் மர்மச்சாவு

ஆரணியில் முன்னாள் ராணுவ வீரர் மர்மமான இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-06 12:53 GMT

ஆரணி

ஆரணியில் முன்னாள் ராணுவ வீரர் மர்மமான இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42), இவர் ராணுவத்தில் வேலை செய்து கடந்த 2021-ம் ஆண்டு ஓய்வு பெற்று ஆரணி வி.ஏ.கே. நகர் அருகில் உள்ள தேனருவி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கும் ஒண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் திருமணம் நடைபெற்று பிரியதர்ஷினி, லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் மனைவி ரேவதி ஒண்ணுபுரம் பகுதியில் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

மோட்டார்சைக்கிள் விபத்து

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெற்றிவேல் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் மொழுகம்பூண்டி கிராமத்திற்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார்.

இதனால் அவர் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

நேற்று அவரை பார்ப்பதற்காக மனைவி ரேவதி வீட்டுக்கு வந்திருந்தார். மேலும் வெற்றிவேலின் அக்கா மகன் விக்னேஷ் என்பவர் பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வெற்றிவேல் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது மனைவி ரேவதி மொழுகம்பூண்டி கிராமத்தில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.

மர்மச்சாவு

அவர்கள் வந்து பார்த்து, வெற்றிவேலை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி டவுன் போலீசில் ெவற்றிவேலின் சின்னப்பையன் புகார் செய்தார்.

அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்