அண்ணாமலை இயேசு நாதர் இல்லை, யூதாஸ் என்பது அனைவருக்கும் தெரியும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
நான் இயேசு அல்ல எது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திரும்பி அடிப்பேன். நாளையே என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா? அவர்களால் முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது. என்றார்.
இந்த நிலையில், நான் இயேசு அல்ல எது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார், ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
நான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் சனாதனதர்ம மனு நீதி படி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை ஐ.பி.எஸ் ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல்" என அவர் பதிவிட்டுள்ளார்.