10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-27 05:36 GMT

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மாலை 5 வரையோ, அல்லது மாலை 5.30 மணி வரையோ நடைபெற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்