வேதாரண்யத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக வேதாரண்யத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்

Update: 2022-06-13 18:18 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக வேதாரண்யம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன் இருப்பு, வாய்மேடு, வேதாரண்யம் மற்றும் ஆயக்காரன்புலம்(பன்னாள்) ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கரும்பம்புலம், ஆயக்காரன்புலம் மற்றும் திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக ஆயக்காரன்புலம், பன்னாள், குரவப்புலம், மருதூர், தென்னம்புலம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி மற்றும் வாய்மேடு, வேட்டைக்காரன் இருப்பு துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தேத்தாகுடி, அவரிக்காடு, நாகக் குடையான், நெய்விளக்கு, வாய்மேடு, தென்னடார், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தகட்டூர், வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்