2021-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தபோதும் மணல் கடத்தியவரை 2 ஆண்டுகளாக கைது செய்யாதது ஏன்?- விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
2021-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தபோதும் மணல் கடத்தியவரை 2 ஆண்டுகளாக கைது செய்யாதது ஏன்? என்று விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ெரங்கசாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டில் கிராவல் மண் கடத்தியதாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் தற்போது மீண்டும் முன்ஜாமீன் கோரியுள்ளார். முறையான காரணம் இன்றி தாக்கல் செய்த இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் மீது 2 ஆண்டுக்கு முன்பு வழக்குபதிவு செய்யப்பட்டு, அப்போதே அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகி உள்ளது. அப்படி இருந்தும் அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.