எட்டயபுரம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

எட்டயபுரம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-12-12 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் நடுவிற்பட்டியில் செங்குந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய தெரு மடத்தில் அமைந்துள்ள சூர்ய விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடந்தது அதனை தொடர்ந்து மகா சங்கல்பம், புண்ணிய வாஜனம், கலச பூஜை, சூர்ய விநாயகர் மூல மந்திர ஜெபம், யாத்திர தானம் கடம் எடுத்து செல்லப்பட்டு, விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது அதனைத் தொடர்ந்து தீபாராதனை நெய் வேத்தியம், சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சந்திர நாராயணன், ஏழு தெரு செங்குந்தர் உறவின் முறை தலைவர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்