நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில்சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராதாபுரம் நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-24 18:55 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் நித்திய கல்யாணி அம்பாள் வரகுண பாண்டீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறும். இதில் வரகுணபாண்டீசுவரர் எழுந்தருளிய தேரை ஆண்களும், நித்திய கல்யாணி அம்பாள் எழுந்தருளிய தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். 10-ம் நாளான 3-ந்தேதி (புதன்கிழமை) தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்