மாணவர்களுக்கு கட்டுரை- ஓவிய போட்டி
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரை- ஓவிய போட்டி நடந்தது.
தட்டார்மடம்:
காவலலர்கள் வீரவணக்க நாளையொட்டி சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி இயக்குனர் டினோ மெரினா ராஜாத்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சுவீனா நன்றி கூறினார்.