ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆறுமுகநேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தொடங்கி வைத்தார். மண்டல செயலாளர் தமிழினியன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ் குட்டி, இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், முற்போக்கு மாணவர் கழக செயலாளர் ரகுவரன், மாவட்ட துணை செயலாளர் இந்திரா மற்றும் மணிவண்ணன், சேவியர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்டுரை போட்டியில் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். நகர பஞ்சாயத்து உறுப்பினர் ஆறுமுக நாயனார், ஆதவா அறக்கட்டளையின் நிறுவனர் பாலகுமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.