காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகள்
காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர். எனவே கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.