ஈரோட்டில் பராமரிப்பு:ரெயில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரம்
ஈரோட்டில் பராமரிப்பு: ரெயில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் வழித்தடத்தில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று ரங்கம்பாளையம் பகுதியில் தண்டவாளம் பொருத்தும் பணி நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் தண்டவாளத்தை லாவகமாக மாற்றும் பணி நடந்தது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.