ஈரோடு-நம்பியூாில் ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு-நம்பியூாில் ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2022-07-21 22:21 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி முன்னிலை வகித்தார். மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், வளர்மதி, கல்வி மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நம்பியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்