ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - போலீசார் தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Update: 2023-02-21 06:15 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஈரோடு கிழக்கில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது அங்குக் களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் ஓபிஎஸ் தரப்பு மற்றும் அமமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார்.. இவர்களைத் தவிர தேமுதிக வேட்பாளர் ஆனந்த் களத்தில் உள்ளார். மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 58 காவலர்கள் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்