ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில்வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்

Update: 2023-08-30 21:02 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் பணி இடை நீக்கத்தை திரும்ப பெற கோரியும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வருவாய்த்துறை ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்