ஈரோடு-சத்தி ரோட்டில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம்

ஈரோடு-சத்தி ரோட்டில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2023-09-03 22:09 GMT

ஈரோடு-சத்தி ரோடு சுவஸ்திக் கார்னர் அருகில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டோரம் செல்கிறது. மேலும் அங்குள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடை குழாயை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்